சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை

​நாடளாவியரீதியில் தொடங்கப்பட்டுள்ள பாரிய தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ​தேடுதலின்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை ஓன்று இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான ஒரு கட்டிடத்தை சோதனை செய்ய முற்பட்டபோது அங்கிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இரு பகுதியினருக்குமிடையில் கடும் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த கட்டிடம் தற்கொலை அங்கிகள் தயாரிக்கும் இடம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...