புதினம்
App
Puthinam NEWS App privacy policy
புதினம் -
[email protected] We, Puthinam NEWS own and manage the website https://puthinam.news .Developer Simple and Lite Apps built the Puthinam NEWS app as an ad supported app. This service is provided by puthinam.news at no cost and is intended for use as is. This page...
Local news
தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம்
புதினம் -
இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் (இயற்பெயர் இராசையா பார்த்தீபன்) அவர்களின் 34வது ஆண்டு வீர வணக்க தினமாகும். இலங்கை இந்திய அரசாங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார். ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின்...
Local news
சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார்
புதினம் -
முன்னாள் ரெலோ அமைப்பின் உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார். வயதின் அடிப்படையில், அவர் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் குடாநாட்டில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் சற்று குறைவடைந்து இருப்பதாகவும், இருப்பினும் குடாநாடு இன்னும் கொரோனா தொற்று அபாய...
National news
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 184 பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேற்படி தரவுகள் அரச அதிகாரிகளால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான இறப்பு மற்றும் தொற்று வீதம் அதிகம் என்றே உள்ளூர்...
National news
பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்
புதினம் -
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும். மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகளே. இருப்பினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் மூன்றாவது அலையில்...
National news
3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றினால் 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 3,333பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். முப்பது வயதிற்குட்பட்ட நால்வரும், முப்பது வயதிற்கும், 59 வயதிற்குமிடைப்பட்ட 24பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 117பேரும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 9,951பேர் உயிரிழந்துள்ளார்கள். மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான...
National news
9 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள்
புதினம் -
இலங்கையில் நேற்றுவரையில் (03/09) ஒன்பது மில்லியன் மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திலிருந்து 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு மேல்மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/Keheliya_R/status/1434043946150232067
National news
செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்
புதினம் -
வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவடையாத நிலையில் நாடு மீண்டும் ஒருவாரம் மேலதிகமாக முடக்கப்படுகிறது.
National news
4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா
புதினம் -
இலங்கைக்கு 4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை சீனா வழங்குகின்றது. மேற்படி தடுப்பூசிகள் நாளை (04/09) இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. https://twitter.com/ChinaEmbSL/status/1433462753583243264 மேலும், சீன அரசாங்கம் இதுவரை 22 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இது ஏறக்குறைய இலங்கையின் மொத்த சனத்தொகைக்கு சமனானதாகும். https://puthinam.news/srilanka-covid-death-204/
National news
30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்
புதினம் -
செப்டெம்பெர் முதலாம் திகதிக்கான உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் 204பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐந்து பேரும், முப்பதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 50பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 149பேரும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் இலங்கையில் 9,604பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். இளவயதினர் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதால், 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
