புதினம்

இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின்

ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புடின் கிழக்கு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைன் படையினரை சரணடையுமாறும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் இவ்வேளையில், புடினின் போர் அறிவிப்பு முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 130,000 ரஷ்ய படையினர் உக்ரைன்...

ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை

2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாதுறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.  சுற்றுலாத்துறையை நம்பியிருந்த பல நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்தது.கொரோனா தடுப்பூசியின் வருகையின் பின்னர், ஏறக்குறைய ஒரு வருட காலத்தினுள் பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளின் வருகைக்காக தமது எல்லைகளை மீளத் திறந்தன. ஆனால் ஆஸ்திரேலியா...

இலங்கையின் நீல இரத்தினக் கல் உலக சாதனை

கடந்த வருடம் (2021) இலங்கையின் இரத்தினபுரி பிரதேசத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நீல இரத்தினக் கல் (Sapphire) உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. சுமார் 503.2kg உடைய அந்த நீல இரத்தினக் கல், உலகின் பெரிய நீலக் கல் என சாதனை படைத்துள்ளது. இந்த் நீல இரத்தினக் கல்லின் பெறுமதி ஏறக்குறைய 2,000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மீது பாரிய பொருளாதார தடை

உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் உள்நுழைந்துள்ளதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் பொருளாதார மற்றும் வங்கிகள் மீதான தடைகளை விதித்துள்ளன.மேலும் ஜேர்மனி, ரஷ்ய நாட்டிடம் இருந்து பெறும் எரிபொருள் வழங்கல்களை (Nord Stream 2 Pipeline) தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.  இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் ரஷ்ய...

இலங்கையில் பரசிட்டமோலின் பாவனை 275% ஆல் அதிகரிப்பு

பொதுவாக காய்ச்சல் ஏற்படும்போது பயன்படுத்தப்படும் பரசிட்டமோலின் பாவனை கடந்த மூன்று வாரங்களில்  275% ஆல் உயர்ந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள ஒமிகுரோன் பரவல் மற்றும் டெங்கு தொற்றால் பலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே பரசிட்டமோலின் பாவனையும் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பரசிட்டமோலின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளாதால், வரும் வாரங்களில் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்

வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறித்தியுள்ளது. அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார்களா என அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, அரச அலுவலகர்கள் எவராவது...

நாடளாவியரீதியில் மின்வெட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றுமுதல் இலங்கையில் நாடளாவியரீதியில் மின்வெட்டு அமுலுக்கு வருகிறது. பிற்பகல் 2:30 மணியிலிருந்து 6:30 மணிவரை ஒரு மணிநேரமும், மாலை 6:30 மணியிலிருந்து 10:30 மணிவரை 45 நிமிட நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சாரசபையினரால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போனதாலேயே இந்த மின்வெட்டு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும்படி CID பிரிவினரிடம் வேண்டுகோள்

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை விசாரணை செய்யவேண்டும் என கொழும்பு மறைவாட்ட சமூக தொடர்பாடல் பிரிவின் தலைவர் வணபிதா ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளிக்க...

விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டது (hacked)

அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு இனம்தெரியாதோரால் ஊடுருவல் (hack) செய்யப்பட்டு அரசிற்கெதிரான பதிவுகள் இடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, தனது முகநூல் கணக்கு பல நாட்களாக ஊடுருவல் (hack) செய்யப்பட்டிருந்தாகவும், இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு முறையிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிஷ்டவசமாக தனது முகநூல் கணக்கினை முழுமையாக மீளப்பெறப்பட்டுள்ளதாகவும்...

இரு சின்னங்களை நீக்கிய தேர்தல் ஆணையகம்

இலங்கையில் தேர்தல் ஆணையகம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு தேர்தல் சின்னங்களை நீக்கியுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்களே நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img