புதினம்

கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,452பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 207பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் எட்டுப் பேர் உயிரிழக்கிறார்கள். இது மிகவும் அபாயகரமான இறப்பு வீதமாகும். முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றபோதும், இறப்பு வீதத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஐம்பது வயதிற்குட்பட்ட பலர் இறக்கிறார்கள். நவீன...

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு, வேடிக்கை பார்த்த இராணுவம்

யாழ் மருதனார்மடம் சந்தியில் பழக்கடை வியாபாரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த வியாபாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஊரடங்கு நேரத்தில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை மருதனார்மடம் சந்தியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் இருந்துள்ளனர். இருப்பினும் வாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். தாக்குதல் சம்பவம்...

ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறியது அமெரிக்க இராணுவம்

இரு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது. உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர், அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் உள்நுழைந்தன. இருபது வருடத்தில் சுமார் 2,400 அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். பல அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த...

இலங்கையில் தொடரும் இள வயதினரின் மரணங்கள்

இலங்கையில் கொரோனாவின் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்த வண்ணமுள்ளது. இளவயதினர் தொடர்ந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 29ம் திகதிக்கான அரச தரவின்படி, கொரோனா தொற்றினால் 216பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதுக்கு உட்பட்ட ஐவர் உள்ளடங்குகின்றனர். மேலும் 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 41பேரும், அறுபது வயதிற்கு...

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை சீராக்க ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் எல்லை மீறிப் போயுள்ள அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கண்மூடித்தனமான விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களைப் பதுக்குதல், அதிக விலைக்கு விற்றல் போன்ற செயற்பாடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்,...

உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கம்

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கை முதன் முதலாக தங்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தி தினேஷ் பிரியந்த தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் 2016ம் ஆண்டு பிறேஸில் ரியோவில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஏற்படுத்தப்பட்ட உலக சாதனையை (63.97m), பிரியந்த 67.79m தூரத்திற்கு...

கட்டுப்பாட்டு விலையில் சீனி

இலங்கையில் சீனிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் சீனியின் விலையை தாம் நினைத்தவாறு அதிக விலையில் விற்று வருகிறார்கள் வியாபாரிகள். செப்டெம்பெர் 1 முதல் சிவப்பு சீனியை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் பெறலாம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்....

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

இலங்கையில் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று(28/08) வெளியான தரவுகளின்படி 4,596பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை 27ம் திகதிக்கான தரவுகளின்படி, 103 பெண்கள் மற்றும் 109 ஆண்கள் உட்பட 212பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதிற்குட்பட்ட இருவர் உள்டங்குகின்றனர். மேலும் முப்பது வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட...

அமெரிக்கா 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது

அமெரிக்கா இலங்கைக்கு 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை நன்கொடையாக 'COVAX' திட்டதினூடாக வழங்கியுள்ளது. அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் டெப்லிஸ் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் தடுப்பூசிகளைக் கையளித்தார். இது குறித்து அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த தடுப்பூசிகள் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அமெரிக்கா இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை...

60 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி

இலங்கையில் முப்பது வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முழுவீச்சில் தொடர்ந்தும் இடம்பெறுமென குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img