புதினம்
National news
பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்தார்
புதினம் -
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கத்திரினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற மனிதப் பேரவலத்திற்கு இன்னும் நீதி கிடைக்காமை, அது தொடர்பான விளக்கங்கள் மற்றும் இலங்கையில் கத்தோலிக்கர்களின் நிலமை தொடர்பாக ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரருடன் உரையாடியுள்ளார். மேலும் வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் திருப்பலி பூஜையையும் நடத்தியுள்ளார். இலங்கையில் 2019ம்...
World News
உலகின் ராட்சத விமானம் முழுமையாக சேதம்
புதினம் -
உக்ரேனில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பின்போது உலகின் ராட்சத விமானமான அன்ரனோவ்-AN225 முழுமையாக சேதமடைந்துள்ளது. "dream" அல்லது "mriya" என்று அழைக்கப்படும் இராட்சத விமானம் உக்ரைன் தலைநகரிற்கு அண்மித்த பகுதியில் அமைந்திருந்த விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
World News
ரஷ்ய ரூபிளின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சி
புதினம் -
அமெரிக்க டொலருக்கு எதிராக ரஷ்ய ரூபிளின் பெறுமதி 30% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. உக்ரைனின் மீதான படையெடுப்பின் பின்னர், மேற்குலக நாடுகள் பல ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியிருந்தன. மேலும் ரஷ்யாவின் பல வங்கிகள் சுவிவ்ட் (Swift) சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக ரஷ்ய பணத்தின் பெறுமதி வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ரஷ்யாவின் பல...
National news
மின்சார சபை பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டிய அமைச்சர்
புதினம் -
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனைக்கு மின் பொறியியலாளர்களே காரணம் என இலங்கையின் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்தியை விடுத்து, எரிபொருள் மூலமான மின் உற்பத்தியை நீண்ட காலமாக மேற்கொண்டு வந்தமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான நிலையில்...
World News
ரஷ்ய இராணுவம் தொடர்பான உக்ரேனிய இணையத்தளத்திற்கு தடை
புதினம் -
உக்ரேனிய உள்நாட்டு அமைச்சினால் ரஷ்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இராணுவ தகவல்கள் அடங்கிய இணையத்தளத்தை ரஷ்யா தடை செய்துள்ளது. இந்த இணையத்தளமானது சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் தொடர்பான விபரங்கள், படங்கள் என்பவற்றை ரஷ்யாவிலுள்ள இராணுவ வீரர்களின் குடும்பங்களிற்கு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரேனிய அரச அதிகாரி தெரிவிக்கையில், ரஷ்யத் தாய்மார்களுக்கு எமது நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் இந்த...
World News
தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம்
புதினம் -
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கின் நிலை இன்று (28/02) மேலும் மோசமடையும் என்பதால், புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 1,000 இற்கும்...
National news
ஐந்து மணிநேர மின்வெட்டு
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபை இன்று (28/02) ஐந்து மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரின் தாக்கத்தால், உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நாடுகளில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. Source : pucl.gov.lk
World News
புடினின் அறிவிப்பால் அதிர்ந்த உலகம்
புதினம் -
ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினின் அறிவிப்பால் உலகமே அதிர்ந்துள்ளது. தனது நாட்டின் அணு ஆயுதப் படையணியை உஷார் நிலையில் இருக்கும்படி விளாமிடிர் புடின் அறிவுறித்தியுள்ளார். இந்த அறிவிப்பு முழு உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது விதித்துள்ள தடைகள் மற்றும் வங்கிகளின் முடக்கம் போன்றவற்றால் ரஷ்யா பாரிய பொருளாதார விளைவுகளை...
Sport NEWS
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி டக்சன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அவரின் மரணத்தில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவு காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட டக்சன், TC Sports Club மற்றும் மாலைதீவின் வலென்ஸியா...
National news
எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை
புதினம் -
எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வரும் மார்ச் மாதம் 3ம் திகதி விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை வெளிவிவகார...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
