புதினம்

100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம்

உக்ரைனில் இருந்து இடம்பெயரும் அகதிகளின் நலன் கருதி, ஹங்கேரி நாட்டு விமான நிறுவனமான Wizz Air 100,000 பயணச் சீட்டுக்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ரோமானியா போன்ற நாடுகளில் இருந்து புறப்படும் Wizz Air விமானங்களிலேயே இந்த இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரையில் உக்ரைனிலிருந்து 660,000பேர் இடம்பெயர்ந்துள்ளனர்...

மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரிப்பு

உக்ரைன் - ரஷ்யா போரினால் எரிபொருள் சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.  ஒரு பரல் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏழு வருடங்களில் காணப்படும் அதிகபட்ச விலையாகும். இதேவேளை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருகின்றது. 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வரும் கப்பலுக்கு அரசாங்கம்...

சிங்களவர்களும் நீதி தேடி ஐ.நா செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்ய இலங்கையின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவா சென்றுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரே தற்போது ஜெனிவா பயணமாகியுள்ளனர். ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தை அவமதித்தார் என்ற...

உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில்

உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதக CNN தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னரே உக்ரேனிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா விசேட செய்மதித் தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளது. மிகவும் பாதுகாப்பானதும், நவீனமயமானதுமான இந்த செய்மதி தொலைபேசி மூலம் உக்ரேனிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசியுள்ளார். உக்ரேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் அதே போன்ற...

இதுவரை 5,700 ரஷ்ய படைகள் உயிரிழப்பு – உக்ரைன்

முதல் ஐந்து நாட்கள் இடம்பெற்ற மோதலில் 5,710 ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 இராணுவத்தினரை தாம் உயிருடன் பிடித்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் இடம்பெற்றுவரும் கடும் மோதல்களில் இரு தரப்பினருக்கும் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், இராணுவத் தளபாடங்கள், விமானங்கள் என பலவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித தகவல்களும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரேனிய இராணுவ தகவல்களின்படி பின்வரும் ரஷ்ய இராணுவ தளபாடங்கள்/கலங்கள் தம்மால் முற்றாக...

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போது இலங்கையில் 11,463 ரஷ்யர்களும், 3,993 உக்ரேனியர்களும் தங்கியுள்ளனர். 

ரஷ்யாவில் மாஸ்டர்காட் பரிவர்த்தனைகள் இடைநிறுத்தம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து ரஷ்யாவின் பல வங்கிகள் சுவிவ்ட் (SWIFT) சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் வங்கி அட்டைகளை (Debit and Credit cards) சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களின் ஒன்றான மாஸ்டர்காட் (Mastercard) நிறுவனமும் தனது பண பரிவர்த்தனைகளை ரஷ்யாவில் இடைநிறுத்தியுள்ளது.  ஏற்கனவே ரஷ்ய ரூபிளின்...

உக்ரைன் தலை நகரை நோக்கி 65km நீளமான ரஷ்ய வாகன தொடரணி

உக்ரைனின் தலைநகரான கிய்வை நோக்கி ரஷ்யாவின் மிக நீண்ட வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருக்கிறது. செய்மதி நிறுவனமான மக்ஸர் டெக்னோலஜிஸ் வெளியிட்டுள்ள செய்மதிப் படங்களில், தலைநகருக்கு வடக்கே உள்ள இவான்கிவ் பிரதேசத்தில் 65km நீளத்திற்கு வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருப்பது செய்மதியால் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை இன்னும் மிக பெரிய அளவில் முடக்கிவிட்டுள்ளமை இதன் மூலம் புலப்படுகிறது. பெரும்பாலும்...

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா

ரஷ்யாவிடமிருந்து பெறும் சகலவிதமான மசகு எண்ணெய் இறக்குமதியையும் கனடா இடைநிறுத்தியுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ருடேயு தெரிவித்துள்ளார். இவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் முதலாவது G7 நாடு கனடாவாகும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் பின்னர் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை காலமும் வருடாந்தம்...

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA மற்றும் UEFA விதித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான EURO...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img