புதினம்
World News
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் (f)பிரான்ஸ்
புதினம் -
(f)பிரான்ஸ் அனுப்பும் ஆயுத தளபாடங்கள் உக்ரைனை நோக்கி வருவதாக ஜனாதிபதி வொலொடொமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று (26/02) காலை தான் (f)பிரான்ஸ் பிரதமர் மக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், போருக்கெதிரான கூட்டணி வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தனது டூவிட்டர் சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார். https://twitter.com/ZelenskyyUa/status/1497456125431717888?s=20&t=zW4p1CSz26z6ERvuhe-ZwA
National news
இன்றுமுதல் பெற்றோல், டீசலின் விலையை அதிகரிக்கிறது LIOC
புதினம் -
இலங்கையில் இன்றுமுதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்கிறது லங்கா இந்தியன் எரிபொருள் நிறுவனம் (LIOC). ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகிறது. LIOC இந்த மாதத்தில் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பாக...
World News
ஐ.நா தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா
புதினம் -
உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து தடுத்துள்ளது. பதினொரு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த போதிலும், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்பதால் ரஷ்யா இதனை இலகுவாக முறியடித்துள்ளது. மேலும் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு...
World News
சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி
புதினம் -
ரஷ்ய படைகள் இன்னும் சில மணிநேரத்தில் உக்ரைன் தலைநகரம் கிய்வைக் கைப்பற்றுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமது படைகளின் எதிப்பினை ரஷ்ய படைகள் முறியடித்து தலைநகரைக் கைப்புற்றி கோரத் தாண்டவம் ஆடுவார்கள், இன்றைய இரவு எமக்கு கடினமான ஒரு இரவாக இருக்கும். உக்ரைனின் விதி தற்போது தீர்மானிக்கப்பட்டுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
World News
1941 இன் பின்னர் உக்ரைன் தலை நகரில் குண்டு மழை
புதினம் -
1941இல் ஹிட்லரின் படையினர் உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர், தற்போதுதான் பெரும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அன்று தாம் அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், அதேபோல் ரஷ்யாவின் தாக்குதல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டுமெனவும்...
World News
உக்ரைனிலிருந்து ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை
புதினம் -
ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், உக்ரைன் நாட்டிலிருந்து ஆண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 60 வயதான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு பிரிவு (DPSA) தெரிவித்துள்ளது. இந்த முடிவானது நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனின் மேற்கு பிராந்தியங்ளுக்கு தப்பி ஓட புகையிரத...
World News
இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
புதினம் -
ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை (07:00 PM IST) வெளியாகவில்லை. உக்ரைன் இராணுவத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் ஆறு போர் விமானக்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும் 50 ரஷ்ய படையினரை தாம் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய இராணுவத்தின் தகவல்களின்படி, உக்கிரேனிய இராணுவத்தினரிடம் இருந்து தாம் எவ்வித பெரிய எதிர்ப்புகளையும் சந்திக்கவில்லை எனவும், எதிரிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு தப்பி ஓடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இரு...
World News
ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி
புதினம் -
ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என உக்கிரேனிய அரச ஊடகம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான அனைத்து தொடர்புகளையும் தாம் துண்டித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான பதற்றம் தொடங்கிய நாளிலிருந்து பல உக்கிரேனிய பொதுமக்கள் அடிப்படை இராணுவப் பயிற்சிபெறும் புகைப்படங்கள் பல வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
National news
மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு
புதினம் -
மசகு எண்ணையின் விலை ஒரு பீப்பா 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றத்தினால் மசகு எண்ணையின் விலை இன்று வியாழன் 101 அமெரிக்க டொலர்களைத் தாண்டிச் சென்றது. ஏற்கனவே கடந்த இரு வருடங்களாக கொரோனாவின் பரவலால் எண்ணையின் விநியோகம் உலகம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் தொடருமெனில்...
World News
பதிலடி வழங்குவோம் – உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்
புதினம் -
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம் என உக்ரைன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிமிற்றோ குலேபா தெரிவித்துள்ளார். டிமிற்றோ குலேபா தனது டுவீட்டர் சமூக வலைத் தளத்தினூடாக இத்தகவலை உலகிற்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் புடினின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்,...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
