புதினம்
National news
தொடரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டம்
புதினம் -
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியினரும் நாடு தழுவியரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (06/03) மாலை கொழும்பு ராஜகிரிய மற்றும் கொகுவல பிரதேசங்களில் மக்கள் மெழுகுவர்த்தியுடன் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்களின்...
World News
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம்
புதினம் -
பன்னாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கிறது. உலக எரிபொருள் சமநிலையை கணக்கிலெடுக்காது, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதனால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியிருந்தன. ரஷ்யாவிற்கு பதிலாக எரிபொருளை வழங்கும் நாடுகளின் வழங்கல்கள் இன்னும் கிடைக்கப் பெறாமையால், ஐரோப்பாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக,...
Cricket
ஷேன் வோர்ன் மாரடைப்பால் மரணம்
புதினம் -
உலகப் புகழ் பெற்ற சுழல் பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வோர்ன் (52) திடீர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமானார். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஷேன் வோர்ன், 2007ல் முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடகாலம் விளையாடிய ஷேன் வோர்ன், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில்...
National news
அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார
புதினம் -
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமைச்சுப் பதவிகளை சடுதியாக நீக்கியது தவறான செயலாகும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தான் அமைச்சராக கடமையாற்றுவதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எந்தவொரு அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்குபற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு அரசியல்...
World News
உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து
புதினம் -
தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலிலேயே இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மின் உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பாக உள்ளது எனவும், அணுக்கதிர் வெளியேற்றம் எதுவும் இதுவரை இல்லை எனவும் பிராந்திய அரச அதிகாரிகள்...
National news
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல் வீரவன்ச
புதினம் -
தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச. ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பபட்ட உத்தியோகபூர்வ பதவி நீக்க கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்குரிய பாணியில் 'நன்றி' தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச. https://twitter.com/weerawansa_w/status/1499390116925943810 கடந்த காலங்களில் மகிந்த வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்த விமல் வீரவன்ச, அண்மைக் காலங்களில் உதய கம்மன்பிலவுடன் சேர்ந்து அரசாங்கத்தை தொடர்ச்சியாக, வெளிப்படையாக விமர்சித்து வந்தார்....
National news
கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்
புதினம் -
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கபடும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபத்தின் முக்கிய அம்சங்களாவன, 1- கோவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் முறைப்படி சீலிடப்பட்டு, உறவினர்களால் வழங்கப்படும்...
National news
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில பதவி நீக்கம்
புதினம் -
இலங்கை அமைச்சரவையிலிருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இன்று (03/03) மாலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக இவர்களின் அமைச்சுப் பதவிகளை அகற்றியுள்ளார். அண்மைக் காலமாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அரசின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வெளிப்படையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
National news
பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30
புதினம் -
இலங்கையில் 500mg பரசிட்டமோல் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.2.30 என அறிவித்து விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் பின்னர் இலங்கையில் பரசிட்டமோலுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வந்ததுடன், கறுப்பு சந்தையில் பெரும் விலைக்கு விற்கப்பட்டும் வந்தது. இதனையடுத்து அரசாங்கம் அடிப்படை வலி நிவாரணியான பரசிட்டமோலின் விலைக்கட்டுப்பாட்டை அறிவித்து வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
National news
கத்தோலிக்கப் பேராயரும் ஜெனிவா சென்றார்
புதினம் -
இலங்கையின் கத்தோலிக்க பேராயர் அதி வணக்கத்திற்குரிய மல்கம் ரஞ்சித் அவர்கள் ஜெனிவா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்று (02/03) இலங்கை நேரப்படி பகல் 2.30 மணிக்கு ஜெனிவாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பேராயர் ஏற்கனவே பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து ஈஸ்ட்டர் தினத்தில்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
