ஷேன் வோர்ன் மாரடைப்பால் மரணம்

உலகப் புகழ் பெற்ற சுழல் பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வோர்ன் (52) திடீர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமானார்.

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஷேன் வோர்ன், 2007ல் முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடகாலம் விளையாடிய ஷேன் வோர்ன்,  டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, கிரிக்கெட் உலகின்  ஜாம்பவானாகத் திகழ்ந்தார்.

shane warne australia

பிரபலமானவை