புதினம்
National news
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது
புதினம் -
இலங்கையில் டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய கட்டணமாக முதல் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோ மீற்றர் தூரத்திற்கு 60 ரூபாயும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் இத்தருவாயில், விரைவில் தனியார் பேருந்து சேவைகளின்...
National news
பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது
புதினம் -
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன் 77 ரூபாவினாலும், 95 ஒக்டேன் 75 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினாலும், சூப்பர் டீசல் 95 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. பெற்றோலின் புதிய விலை 92 ஒக்டேன் 254/= 95 ஒக்டேன் 283/= கடந்த இரு நாட்களுக்கு முன்னர், இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (LIOC) பெற்றோல், டீசல் விலையை உயர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
National news
ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி
புதினம் -
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை தமிழரசுக் கட்சியை வரும் செவ்வாய்க்கிழமை (15/03) சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக தமது கட்சி ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருந்ததாகவும், இறுதியில் வரும் செவ்வாய்க்கிழமை தம்மைச் சந்திக்க ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்...
National news
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித்
புதினம் -
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கேற்ப ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுமந்திரனிடம் சஜித் பிரேமதாச தனது கட்சி நிலைப்பாட்டை விளக்கி கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார். https://twitter.com/MASumanthiran/status/1501852603742928898
National news
டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியால், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுஸ்தாபனத்தின் (LIOC) நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாயினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். டீசலின் புதிய விலை 214/=பெற்றோலின் புதிய விலை 254/= ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்து இடம்பெறுவதால்...
National news
54 வருடங்களின் பின்னர் மீண்டும் விமான சேவை
புதினம் -
54 வருடங்களின் பின்னர் இலங்கையின் முதல் சர்வதேச விமான நிலையமான இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மாலைதீவிற்கான விமான சேவைகள் ஆரம்பமாகின்றன என விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய இராஜாங்க அமைச்சர் D.V.ஜானக தெரிவித்துள்ளார். மார்ச் 27 முதல் இலங்கைக்கும், மாலைதீவிற்குமிடையிலான பிராந்திய விமான சேவையை மாலைதீவு அரச விமான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இவ்விமான...
Articles
இராணுவ இலங்கை !!
புதினம் -
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தரத்தில் உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்ற டி.சொய்சா என்பவரே உடனடி அமுலுக்கு வரும்வகையில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் இராணுவ தளபதியான சவேந்திர சில்வா தொடக்கம் டி.சொய்சா வரைக்கும் அரச உயர் பதவிகளில் ஜனாதிபதிக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளே (ஓய்வு...
World News
உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
புதினம் -
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை (UNHCR) ஆணையாளர் (f)பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். இது இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர், ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய இடம்பெயர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை 406 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 801பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை (OHCHR) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை...
National news
சமையல் எரிவாயு தட்டுப்பாடு, 3,000 வெதுப்பகங்கள் மூடல்
புதினம் -
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடு பூராகவும் மொத்தம் 3,000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் என்பனவும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால், சமையல் எரிவாயு இறக்குமதிக்கான கடன் சான்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என...
National news
ஜனாதிபதி பெண்களான எம்மைக் கண்டு அஞ்சுவது ஏன்? – ஹிருணிகா
புதினம் -
புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர் எனக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான ஜனாதிபதி, பெண்களான எம்மைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்? என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வை காணுமாறு வலியுறுத்தி சமகி வனிதா பலவேகய எனும் மகளிர் அணி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
