புதினம்

பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசியலிலும் சில பல சலசலப்புகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு வடிவம்தான் 'தேசிய அரசாங்கம்' எனும் சலசலப்பு. மகிந்த ராஜபக்ச ஓய்வு பெறப்போவதாகவும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க திரை மறைவில் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெறுவதாகவும் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள்...

இன்று அனைத்து வலயங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு

இன்று (29/03) இலங்கையின் அனைத்து வலயங்களிலும் 7 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமுமாக மொத்தம் 7 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால், இலங்கை மின்சாரசபை மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

வெளிநாட்டு நாணய மாற்றுனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல். மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.

புகையிரத கட்டணங்கள் உயர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால், புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய கட்டணங்கள் அமுலிற்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான விமான சேவைகளை நிறுத்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கான தனது விமான சேவைகளை இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை இடை நிறுத்துகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், ரஷ்யா மீது பல உலக நாடுகள் பாரிய பொருளாதார தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக விமானங்களை காப்புறுதி செய்யும் நிறுவனங்களும் மொஸ்கோவிற்கான விமான சேவைகளுக்கு காப்புறுதி வழங்குவதை நிறுத்தியுள்ளன....

அரசை ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கவேண்டும் – சம்பிக்க

தற்போதைய குடும்ப ஆட்சியாளர்களால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. அவர்கள் தாமாகவும் விலக மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஆகவே நாம்தான் அவர்களைத் துரத்தியடிக்கவேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் எரிபொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்துவார்கள். வாழ்க்கைச் செலவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. எனவே இந்த...

2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கும் சீனா

சீன அரசாங்கம் இலங்கைக்கு 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான 65 வருட இராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் சீனா, வர்த்தகரீதியாக இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மேற்கொண்டு 70 வருடங்களையும் நிறைவு செய்கிறது. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டினை அடுத்து, இலங்கை அரசாங்கம் விடுத்த...

இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு தரப்பு உடன்படிக்கைகள் !!!

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னரே ஒரு பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (JVP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி  தெரிவித்துள்ளார். எவ்வித நிபந்தனைகளும் இன்றியே இந்தியா கடனுதவி செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தபோதிலும், அவரின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக அவசரமாக இந்த ஒப்பந்தங்கள்...

21வது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த விஜயதாச ராஜபக்ச!!

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல் அமைப்பில் 21வது திருத்தச் சட்டத்திற்கான முன்மொழிவை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நிறைவேற்று அதிகாரத்தினை அமைச்சரவைக்கு வழங்கி, அந்த அமைச்சரவை புதிய ஜனாதிபதியினை நாடாளுமன்றம் ஊடாக தெரிவு செய்யும் வகையில் 21வது திருத்தச் சட்டம் இருக்குமென விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள...

ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும்

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள்  மீதான கண்காணிப்புகள் மற்றும் அடக்குமுறைகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் விக்டோரியா நூலண்ட் நேற்று (23/03) தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டின் மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்து...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img