இன்று (31/03) இலங்கையில் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 26 வலயங்களாகப் பிரித்து, பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால், எந்நேரத்தில் மின்வெட்டு இடம்பெறுமென தெரியாத ஒரு நிலையிலேயே பெரும்பாலானா மக்கள் உள்ளனர்.
இதேவேளை நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக கையடக்கதொலைபேசி சேவைகளில் பாதிப்பு ஏற்படுமென குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக 3G மற்றும் 4G சேவைகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டினால் எரிபொருள் இறக்குமதியில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கடும் கோடை காலம் என்பதால், நீர் மின் உற்பத்தியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மின்வெட்டு நிலமை நீண்ட காலம் தொடரும் என அஞ்சப்படுகிறது.