பாராளுமன்றம் 10 மணிக்கு கூடுகின்றது. பிரதமர் பதவியை இழப்பாரா?

இலங்கை வரலாற்றில் என்றும் இடம்பெற்றிராத புதியதொரு சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடுகின்றது.

நாடுதழுவியரீதியில் இடம்பெற்றுகொண்டிருக்கும் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில், பாராளுமன்றம் கூடுகிறது. அரசிற்கு ஆதரவளித்துவரும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சாத்தியங்களும் காணப்படுகின்றது.

சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பையும் தாண்டி அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் தொடர்ந்து இருப்பார்களா, இல்லையா என்பது இன்று தெரியவரும். ஏற்கனவே பல அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரச ஆதரவு பிரமுகர்கள் என பலரது வீடுகளையும் மக்கள் முற்றுகையிடும் நிலமை இலங்கையின் பல இடங்கள்ளிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்று கூடும் பாராளுமன்றில், அரசிற்கு தேவையான 113 ஆசனங்கள் இல்லாதுவிடின் மகிந்த பிரதமர் பதவியை இழக்க நேரிடும். நேற்று சுதந்திரக் கட்சி அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டதால், அரசு ஏற்கனவே தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles