புதினம்

றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி

றம்புக்கணையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்ய கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையை அடுத்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகியோரை கைது செய்யுமாறு கேகாலை நீதிமன்ற நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்...

ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கத் தயார் என தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைக்க தான் அடிப்படையில் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தனித்து செயற்படும்...

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம்

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருடன் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோரும் பயணித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டிலுள்ள டெரென்ஸி மாநரக சபையின் முதல்வர் Aude Largade அவர்களை மணிவண்ணன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புத் தொடர்பாக டெரென்ஸி மாநரக...

மாற்றம் நிச்சயமாகத் தேவை – சனத் ஜெயசூரியா

நடப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நிச்சயமாகப் பதவி விலக வேண்டும் என சனத் ஜெயசூரியா வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை இந்த அரசாங்கம் சரி செய்யும் என மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தினால் உரிய தீர்வினைப் பெற முடியாமல் போனதால்தான் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே...

தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகளில் சிக்கல்!

இலங்கையில் பேருந்து உதிரிப் பாகங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பேருந்து சேவைகளில் தடங்கல் ஏற்படுமென தனியார் பேருந்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் வாரத்திலிருந்து சேவைகளை இடைநிறுத்தவேண்டி வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். பேருந்து உதிரிப்பாகங்களான டயர், பிரேக் லைனர் மற்றும்...

இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும்

இன்று(26/04) 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் (LP Gas) கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 28ம் திகதி, இன்னுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் வந்தடையவுள்ளது. மேற்குறித்த இரு கப்பல்களுக்குமான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதால், உடனடியாகவே எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித...

டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க்

உலகின் முதன்மைப் பணக்காரரான ஈலொன் மஸ்க் டுவிட்டர்(twitter) வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முழுமையாக வாங்குகிறார். இதன் மூலம் டுவிட்டர் தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டாளர் ஆகின்றார் ஈலொன் மஸ்க். உலகின் முதலாவது பணக்காரர் இருப்பினும், உலகிலுள்ள தொழிலதிபர்களிலேயே தனித்துவம் வாய்ந்தவர் ஈலொன் மஸ்க். வெளிப்படையாகவே தனது நிலைப்பாட்டினை உலகிற்கு சொல்பவர். இதுவரையில் 84.4 மில்லியன்...

மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவிற்கு பொதுஜன பெரமுனவின் 66 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு வழங்குகின்றனர். பலமற்ற அரசாங்கத்தை அகற்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதியும் தவறியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி...

கம்மன்பிலவின் கணக்கு

பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தாம் 120 வாக்குகள் பெற்று பிரேரணையை நிறைவேற்றுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், எவ்வாறு 120 உறுப்பினர்கள் பெறுவார்கள் என்பதை பின்வருமாறு விபரித்துள்ளார். 120 உறுப்பினர்களின் விபரம், எதிரணி உறுப்பினர்கள் (SJB,...

அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பலகட்ட கலந்துரையாடல்களின் பின்னர் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இம்முடிவு சம்பந்தமாக ஆளும் கட்சியின் தலைவர்கள், எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்றில் சுயமாகச் செயற்படும் அணியினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். https://twitter.com/JeevanThondaman/status/1518461545272922112

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img