புதினம்

இலங்கையில் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை

14 லட்சம் மாணவர்கள் காலை உணவு எடுப்பது இல்லை.

FIFA உலகக்கிண்ணம் 2018 அணிகளுக்கான அட்டவணை

ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டியில் பங்குபெறும் 32 அணிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. (படம் : FIFA.com) 2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல் போட்டியில், போட்டிகளை நடத்தும் நாடான ரஷ்யா, சவூதி அரேபியா அணியுடன் மோதுகின்றது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். This is to inform everyone that I have decided to contest in the upcoming election to be held in RK Nagar. I will...

வடமாகாண தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக புதிய சட்டம் விரைவில் !

வடமாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையிலும், வகுப்பு நேரங்களை சீரமைப்பது தொடர்பாகவும் புதிய நிதியச் சட்டம் உருவாக்கப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி காலை ஆறு மணிக்கு முன்னரும், மாலை ஆறு மணிக்குப் பின்னரும், தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள் நடத்துவதை...

யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக புத்திக பத்திரண குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று (30/11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 இனிப்புகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் நடவடிக்கைகள் நிறுத்தவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்க்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாடசாலை...

விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்றில் வழக்கு

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சட்டரீதியான வருமானத்தைத் அப்பாற்பட்டு, சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில்,...

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் – டொனால்ட் டிரம்ப்

அண்மையில் ட்விட்டர் தளத்தில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்ததை, இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே விமர்சித்திருந்தார். இதற்க்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், தன்மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, இங்கிலாந்தில் நடக்கும் நாசகார தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தினை உற்றுநோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். .@Theresa_May, don’t focus on me,...

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம் கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரரை, சிலாபம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகில் இருந்த சிலர் கடற்படையினரைக் கண்டதும் கடலில் குதித்து தப்பியுள்ளனர். சட்டவிரோதமாக படகு மூலம் வரும் எவருக்கும் ஆஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப்படமாட்டாதென ஆஸ்திரேலியா அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.                             கொழும்பு ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய ஊடக அறிக்கை (28/09/2015)

இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை

பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடுங்காற்று, மமழையின் காரணமாக இதுவரை 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் மழை...

கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது

ஹம்பாந்தோட்டை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. இத் தடை உத்தரவு வரும் டிசம்பர் ஆறாம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோத்தபாயாவினால் நீதிமன்றத்திற்கு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img