வடமாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையிலும், வகுப்பு நேரங்களை சீரமைப்பது தொடர்பாகவும் புதிய நிதியச் சட்டம் உருவாக்கப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி காலை ஆறு மணிக்கு முன்னரும், மாலை ஆறு மணிக்குப் பின்னரும், தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும் வகையிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் வகையிலும் நிதியச் சட்டம் உருவாக்கப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் ஒய்வு மற்றும் மாணவர்கள் பெற்றோருடன் செலவிடும் நேரம் மிகக் குறைவாக காணப்படுகின்றமை போன்ற காரணங்களுக்காகவே இந்த நிதியச் சட்டம் உருவாக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.