யாழ்ப்பாணத்தில் “ஹெரோயின் இனிப்பு” விற்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று (30/11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில், ஹெரோயின் கலந்த 50 இனிப்புகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் நடவடிக்கைகள் நிறுத்தவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்க்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
யரழ்ப்பாணத்தில் நடைபெறும் இப்படியான ஆபத்தான நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஏன் எதுவும் கதைப்பதில்லை?