இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை

பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடுங்காற்று, மமழையின் காரணமாக இதுவரை 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை தொடர்வதால் மழை இன்னும் தொடர்வதால் நில்வள, களு மற்றும் கின்ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

முந்திய செய்தி
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடையில் மூன்று மீனவர்களும், கிரிபத்கொட மற்றும் மடோல்சிமா பகுதியிகளில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தொடந்துவ பகுதியில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Latest articles

Similar articles