பொருளாதார பிரச்சனை காரணமாக சில பிள்ளைகள் காலை உணவை எடுக்காமலே பாடசாலைக்கு செல்கின்ற அதேவேளை பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாகவும் சில பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுகின்றது.
2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்வதாக கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் அதாவது 14 லட்சம் பேர் காலை உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறுகின்றது.
முழுமையான ஆக்கத்திற்கு இங்கே அழுத்தவும் : BBC தமிழ்