பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரைக் கைது செய்ய உத்தரவு!

‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் ஆர்ப்பாட்டகாரர்களைத் தாக்கிய 22 பேரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், காவல்துறைமா அதிபருக்கும், குற்றப் புலனாய்வு பிரிவின் உதவிக் காவல்துறைமா அதிபருக்கும் பணித்துள்ளார்.

இதில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மகிந்தவின் நெருங்கிய கைக்கூலிகளான பின்வரும் நபர்களே காடைத்தனத்தில் ஈடுபட்டவர்களை வழிநடத்தியவர்களாவர்.

🔴 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ
🔴 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த
🔴 சஞ்சீவி எதிரிமான (பா.உ)
🔴 மிலான் ஜெயதிலக (பா.உ)
🔴 சமன் லால் பெர்னாண்டோ (மொறட்டுவ மேயர்)
🔴 மகிந்த ஹகண்டகமகே
🔴 டான் பிரியசாட்
ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles