பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்தே கொல்லப்பட்டுள்ளார்

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரள மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்துள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட பதற்றத்தினால் மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜண்ட் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன்போது பலர் காயமடையந்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற மக்கள் அமரகீர்த்தி மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். மக்களின் தாக்குதலால் உள் எலும்புகள் முறிவடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதாலேயே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மெய்ப்பாதுகாவலர் மக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அமரகீர்த்தி அத்துக்கொரள தற்கொலை செய்துகொண்டார் என்றே செய்திகள் வெளியாகி இருந்தன.

amarakeerthi athukorala
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles