ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார்.

இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார்.

நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக முதலீட்டுச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார்துறையினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles