கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சித்த இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
47,000 அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் அனுப்ப முயற்சித்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் சட்டவிரோத சொத்துக்கள் சம்பந்தமாக விசாரணை செய்யும் கிருலப்பனை காவல்துறையினரிடம் கைளிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், சட்டவிரோதமான உண்டியல் மூலமான பணப் பரிமாற்றங்கள் மத்திய வங்கியினால் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.