திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து, பல பொதுமக்கள் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலிற்கு அருகில் அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள்.

இன்று காலை அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் புறப்பட்ட மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை முகாமில் இறங்கியுள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. இராணுவரீதியில் மிக பாதுகாப்புமிக்க திருகோணமலை கடற்படை முகாமிற்குள் மக்கள் எவருமே உள்நுழைய முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து சிறிய விமானம் மூலம் இந்தியா அல்லது சீஸெல்ஷ் போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகளுமுண்டு!!!

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles