இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கபடும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபத்தின் முக்கிய அம்சங்களாவன,
1- கோவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் முறைப்படி சீலிடப்பட்டு, உறவினர்களால் வழங்கப்படும் பிரேதப் பெட்டியில் வைக்கப்படும்.
2- சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்தினுள் தகனம் செய்யப்படவேண்டும்.
3- இவ்வாறு விடுவிக்கப்படும் சடலம், தகனம் செய்யப்படும் இடத்தைத் தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.
4- சடலம் பதனிடப்படக் கூடாது (embalmed)
5- சடலம் தகனம் செய்யப்படும் இடம் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளலாம். (நீதிமன்ற உத்தரவுகள் இல்லாத நிலையில் மாத்திரம்)
6- சடலம் உறவினர்களின் செலவில் தகனம் செய்யப்படவேண்டும்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை,


