உக்ரைன் தலை நகரை நோக்கி 65km நீளமான ரஷ்ய வாகன தொடரணி

உக்ரைனின் தலைநகரான கிய்வை நோக்கி ரஷ்யாவின் மிக நீண்ட வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருக்கிறது.

செய்மதி நிறுவனமான மக்ஸர் டெக்னோலஜிஸ் வெளியிட்டுள்ள செய்மதிப் படங்களில், தலைநகருக்கு வடக்கே உள்ள இவான்கிவ் பிரதேசத்தில் 65km நீளத்திற்கு வாகனத் தொடரணி நகர்ந்துகொண்டிருப்பது செய்மதியால் கண்டறியப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை இன்னும் மிக பெரிய அளவில் முடக்கிவிட்டுள்ளமை இதன் மூலம் புலப்படுகிறது. பெரும்பாலும் இன்று அல்லது நாளை உக்ரைனின் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles