மின்சார சபை பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டிய அமைச்சர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனைக்கு மின் பொறியியலாளர்களே காரணம் என இலங்கையின் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தியை விடுத்து, எரிபொருள் மூலமான மின் உற்பத்தியை நீண்ட காலமாக மேற்கொண்டு வந்தமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான நிலையில் பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் நியாயமாகாது. மின்சக்தி துறையுடன் சம்பந்தப்படாத அமைச்சர் இவ்வாறு கண்மூடித்தனமாக பொறியியலாளர்களைக் குற்றம் சாட்டி, அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் தொனியில் சிங்கள மக்களிடையே பேசியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles