ரஷ்ய இராணுவம் தொடர்பான உக்ரேனிய இணையத்தளத்திற்கு தடை

உக்ரேனிய உள்நாட்டு அமைச்சினால் ரஷ்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இராணுவ தகவல்கள் அடங்கிய இணையத்தளத்தை ரஷ்யா தடை செய்துள்ளது.  

இந்த இணையத்தளமானது சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் தொடர்பான விபரங்கள், படங்கள் என்பவற்றை ரஷ்யாவிலுள்ள இராணுவ வீரர்களின் குடும்பங்களிற்கு தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரேனிய அரச அதிகாரி தெரிவிக்கையில், ரஷ்யத் தாய்மார்களுக்கு எமது நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

உக்ரேனிய அரசின் தகவல்களின்படி இதுவரை 4,300 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும், சுயாதீனமாக அதை உறுதி செய்ய முடியவில்லை என மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமது இழப்புகள் தொடர்பாக ரஷ்யா இதுவரை எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles