தென் கிழக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வரலாறு காணாத கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

வெள்ளப் பெருக்கின் நிலை இன்று (28/02) மேலும் மோசமடையும் என்பதால், புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பல வீதிகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 1,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

18,000 இற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பல ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles