எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை – இலங்கை

எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால் வரும் மார்ச் மாதம் 3ம் திகதி விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,  எந்தவொரு நாடும் நாம் என்ன செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. அரசாங்கத்தினால் ஆற்றப்படும் நல்ல விடயங்களை ஏற்று அதற்கு பிறநாடுகள் ஆதரவு தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கருத்து தெரிவித அவர், மனித உரிமை தொடர்பாக இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவையே எனவும் குறிப்பிட்டார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles