இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின்

ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புடின் கிழக்கு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைன் படையினரை சரணடையுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் இவ்வேளையில், புடினின் போர் அறிவிப்பு முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

130,000 ரஷ்ய படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். எவ்வேளையிலும் பாரிய போர் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது. 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles