30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்

செப்டெம்பெர் முதலாம் திகதிக்கான உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் 204பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐந்து பேரும், முப்பதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 50பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 149பேரும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் இலங்கையில் 9,604பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இளவயதினர் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதால், 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் மாவட்டரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேற்படி வயதிற்கிடைப்பட்ட ஏறக்குறைய முப்பத்து ஏழு இலட்சம் இளைஞர்கள், யுவதிகள் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக இலங்கை சுகாதாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles