இலங்கையில் கொரோனாவின் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்த வண்ணமுள்ளது. இளவயதினர் தொடர்ந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
29ம் திகதிக்கான அரச தரவின்படி, கொரோனா தொற்றினால் 216பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முப்பது வயதுக்கு உட்பட்ட ஐவர் உள்ளடங்குகின்றனர். மேலும் 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 41பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 170பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 30ம் திகதிக்கான அரச தரவின்படி, புதிதாக 4,562 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை இலங்கையில் 8,991 பேர் உயிரிழந்திருப்பதுடன், 371,992 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்கள்.