செப்டெம்பர் 6ம் திகதிவரை நீடிப்பு

ஆகஸ்ட் மாதம் 30ம் திகதியுடன் முடியவிருந்த நாட்டின் முடக்கநிலை, வரும் செப்டெம்பெர் 6ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதிக்கும், தேசிய கொரோன தடுப்பு செயலணிக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மேலதிக ஒரு வாரகால முடக்கத்திற்கு சம்மதித்துள்ளார்.

நாட்டை முற்றாக முடக்குவதில் பயனில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பினும், கொரோனா தொற்றுக்குள்ளாகுபர்களும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால், வேறு வழியில்லாமல் ஜனாதிபதி நாட்டை முடக்க சம்மதித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles