நாட்டை முடக்க ஜனாதிபதி மறுப்பு!!

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால் நாளாந்த உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்ந்த தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் நாட்டை முழுமையாக முடக்கும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்திருந்தனர். இருப்பினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை முடக்க மறுத்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று கொரோனா செயலணியினருடன் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளார். நாட்டை முடக்காது கடுமையான பயணத்தடைகளை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் ஜயசுமான, லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles