இந்திய இலங்கை பிரதமர்கள் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை இன்று (23/11) புது டில்லியில் சந்தித்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட திரு.ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

இதன்போது வணிக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல், இலங்கை கடற்பரப்பில் சீன கடற்படையின் ஆதிக்கம், இந்திய மீனவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles