இன்று (01/12) உலக எய்ட்ஸ் தினம்

இன்று (01/12) உலக எய்ட்ஸ் (AIDS) தினமாகும். HIV எனும் வைரஸ் மூலம் ஏற்படும் எய்ட்ஸ் நோயிற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

இலங்கையில் ஏறத்தாழ 4,000 இற்கும் அதிகமானனோர் HIV தொற்றுடன் வாழ்ந்துவருகிறார்கள். பாலியல் தொழிலாலும், பாதுகாப்பற்ற ஓரினச் சேர்க்கையாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவிவருகின்றது.

குறிப்பாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதும் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

AIDS : Acquired ImmunoDeficiency Syndrome
HIV : Human Immunodeficiency Virus

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles