ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல் வீரவன்ச

தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச.

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பபட்ட உத்தியோகபூர்வ பதவி நீக்க கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்குரிய பாணியில் ‘நன்றி’ தெரிவித்துள்ளார் விமல் வீரவன்ச.

கடந்த காலங்களில் மகிந்த வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்த விமல் வீரவன்ச, அண்மைக் காலங்களில் உதய கம்மன்பிலவுடன் சேர்ந்து அரசாங்கத்தை தொடர்ச்சியாக, வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இதனால் கோபமுற்ற ஜனாதிபதி இருவரையும் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles