அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு இனம்தெரியாதோரால் ஊடுருவல் (hack) செய்யப்பட்டு அரசிற்கெதிரான பதிவுகள் இடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச, தனது முகநூல் கணக்கு பல நாட்களாக ஊடுருவல் (hack) செய்யப்பட்டிருந்தாகவும், இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு முறையிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதிஷ்டவசமாக தனது முகநூல் கணக்கினை முழுமையாக மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடுருவல் இடம்பெற்றிருந்த காலத்தில் அரசிற்கெதிராக பல பதிவுகள் பகிரப்பட்டிருந்ததாகவும், அதனால் பலர் தன்னை தூற்றி கருத்துக்களை வெளியிட்டுயிருப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.