புதிய வெளிவிவகார அமைச்சரைப் புறக்கணித்த மேற்குலக நாடுகள்

எட்டு மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் புதிய வெளிவிவகார அமைச்சரான சரத் அமுனுகமவினால் ஒழுங்கு செய்த கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

ஜனாதிபதி அரசியலமைப்பிற்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த புறக்கணிப்பிற்கு காரணமென செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து, நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளின் தூதுவர்கள் மேற்குறித்த கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இலங்கையின் அயல் நாடான இந்தியா, தனது இளநிலை அதிகாரியையே அனுப்பியிருந்தது.

Latest articles

Similar articles