தமிழர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றதிற்கு தெரிவானார். இவரிற்கு தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத்தில் தொழிளாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான், பொதுஜன பெரமுன கட்சியியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். இவரிற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
