வெனிசுலா அதிபர் மீதான ட்ரோன் தாக்குதல், ஆறு பேர் கைது

வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவர் மீது வெடிகுண்டு நிரப்பிய இரு ட்ரோன்கள் (Drone) தாக்குதல் நடத்தியது. இருப்பினும் அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு DJI M600 ரக இரு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தலா ஒரு கிலோகிராம் நிறையுடைய C4 வெடிமருந்துகளைக் கொண்டிருந்துள்ளன.

 

இந்த தாக்குதலுக்கு கொலம்பிய அரசே பொறுப்பு என வெனிசுலா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles