USD.800 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

கடந்த நான்கு கிழமைகளாக இடம்பெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரினால் உக்ரைனின் பல பகுதிகள் சுடுகாடாக மாறியுள்ளது. இது ஏறத்தாள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் இடம்பெற்ற கட்டிட மற்றும் சொத்து அழிவுகளுக்கு ஒப்பானது.

தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் விமான குண்டு வீச்சினால் பெரும்பாலான கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன. இவ்வாறான நிலையில் அமெரிக்கா வழங்கும் ஆயுத தளபாடங்களுடன் முதலாவது கப்பல் இன்னும் ஓரிரு தினங்களில் உக்ரைனை வந்தடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

800 மில்லியன் டொலர் பெறுமதியான பாரிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்குகின்றது. இருப்பினும் எவ்வகையான ஆயுதங்கள் வழங்கப்படுகிறது என எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles