அமெரிக்கா 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது

அமெரிக்கா இலங்கைக்கு 100,000 பை(f)ஸர் தடுப்பூசிகளை நன்கொடையாக ‘COVAX’ திட்டதினூடாக வழங்கியுள்ளது. அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் டெப்லிஸ் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் தடுப்பூசிகளைக் கையளித்தார்.

இது குறித்து அமெரிக்கவின் இலங்கைக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த தடுப்பூசிகள் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அமெரிக்கா இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles