சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்

இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன்,  நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை இராணுவத்தளபதியின் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டதென்றும், இதனைக் கருத்திற்கொண்டு பயணத் தடை மீதான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை இதோ.

US bans Shavendra Silva
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles