22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல்

மலேசியாவிலிருந்து 22,000 மெற்றிக்தொன் யூரியா உரத் தொகுதியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ளது.

மேற்படி யூரியா உரம் பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கப்படும் என இலங்கை தேசிய உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 13,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதெனவும் இலங்கை தேசிய உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யூரியா உரப் பாவனையைத் தடை செய்திருந்ததுடன், இறக்குமதியையும் நிறுத்தியிருந்தார். இதனால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles