மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க

நேற்று (18/11), ஜனாதிபதியுடன் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் முடிவுகளேதும் எடுக்கப்படாமல் முடிந்திருந்தது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதியுடன் மஹிந்த, ரணில், சம்பந்தன் உள்ளிட்ட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் கூட்டம் இடம்பெற்றபோதும், காத்திரமான ஒரு முடிவைக் கூட எடுக்காமல் கூட்டத்தை நிறைவுசெய்திருந்தனர்.

இருப்பினும் இன்று (19/11) பாராளுமன்றம் கூடும்போது ஐ.தே.க தனது பெருன்பான்மையை நிரூபிக்க இருக்கிறது.

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிட்டு வாக்கு கேட்டல் அல்லது இலத்திரனியல் வாக்குப் பதிவை மேற்கொள்ளல் சிறப்பானதாக இருக்குமென ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், எவ்வாறு வாக்குப்பதிவு இடம்பெறுமென்று தெரியவில்லை.

எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles