ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!

தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

நேற்று (18/02) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரதமரும், சபாநாயகரும் சந்தித்தபின்னர் ஐ.தே.க இந்த முடிவை எடுத்திருப்பதாக அறியமுடிகிறது.

பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசிற்கு, ஏற்கனவே அமைச்சர்களாகவுள்ள சில ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவு வழங்கும் சாத்தியம் காணப்படுகின்றவேளையில், பல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சாத்தியமும் காணப்படுகிறது.

ஐ.தே.க ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சரவை வரும் புதன்கிழமை (21/02) பதவியேற்குமென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.க ஆட்சி அமைத்தால், ஜனாதிபதியின் ஆதரவு கிடைக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும் பாரிய சர்வதேச அழுத்தங்கள் செல்வாக்குச் செலுத்தும் இலங்கை அரசியலில், எந்த நேரம் என்ன மாற்றம் நடைபெறும் என்பதை ஊகிப்பது சற்று கடினமான ஒரு விடயம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் எவ்விதமான முடிவும் இதுவரை தெரியவரவில்லை.

Latest articles

Similar articles