உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை (UNHCR) ஆணையாளர் (f)பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். இது இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர், ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய இடம்பெயர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரை 406 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 801பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை (OHCHR) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரபலமானவை