உக்ரேனிய மக்களுக்கான கூகுளின் சேவை

உக்ரேனிய அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தை ஆன்ட்ரோய்ட் தொலைபேசிகளை பாவிக்கும் உக்ரேனிய மக்களுக்காக செயற்படுத்தியுள்ளது.

ரஷ்ய போர் விமானங்கள் நடத்தப் போகும் தாக்குதல்களை மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய அம்சத்தைதான் கூகுள் நிறுவனம் உக்ரேனிய நாட்டு ஆன்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்காக செயற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள் பூகம்பங்கள் ஏற்படப்போவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. தற்போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் விமான தாக்குதல் இடம்பெறப்போகும் எச்சரிக்கையையும் மக்களுக்கு விடுத்து வருகிறது.

ரஷ்ய உக்ரேனிய போர் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே கூகுள் தனது வரைபட சேவையை (Google Maps) உக்ரேனில் நிறுத்தியிருந்தது. இதற்கு அந்நிறுவனம் தெரிவித்திருந்த காரணம், மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளின் தரவுகளை ரஷ்ய உளவுப் பிரிவினர் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்காகவே தாம் இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles